முக்கியச் செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்
சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அந்தக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த ஆட்சியில் மக்கள் கோரிக்கைகளுக்காக தன்னெழுச்சியான பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இத்தகைய போராட்டங்களில் மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, போராடியவர்கள் மீது
காவல்துறையினர் பல்வேறு வழக்குகள், தடியடி, சிறை உள்ளிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, டாஸ்மாக் கடைகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பல்வேறு தரப்பு பெண்களும், இயக்கங்களும், அமைப்புகளும் கலந்து கொண்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை புனைந்துள்ளனர். இவையனைத்தும் ஆளும் கட்சியின் நிர்பந்தத்தால், அரசியல் நோக்கத்திற்காக புனையப்பட்ட வழக்குகளே தவிர, குற்றச் செயல்களுக்காக பதியப்பட்ட வழக்குகள் அல்ல.

தற்போது தமிழக அரசு சிறந்த முன்னுதாரணமாக, கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறிப்பு, மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், சேலம் 8 வழிச்சாலை, நீட், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற்றுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்பதுடன், தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதே போன்று, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள், விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிராக போராடிய விவசாயிகள், விளை நிலங்களில் பெட்ரோலிய
குழாய் பதிப்பு, எரிவாயு குழாய் பதிப்பு போன்ற திட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப
பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மல்யுத்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

Halley Karthik

மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ?-கமல் ஹாசன் கேள்வி

Web Editor

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கிய முதலமைச்சர்!

Gayathri Venkatesan