ஜூலை 25 அதிகாலை கால்பந்து மைதானம் அளவு கொண்ட விண்கல் ஒன்று புவியை கடக்க இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
ஜூலை 25 அதிகாலை 3 மணியளவில் புவியிலிருந்து 3லிருந்து 4 மில்லியன் கி.மீ தொலைவில் இந்த விண்கல் கடந்து செல்கிறது. விநாடிக்கு சுமார் 8.2 கி.மீ தொலைவில் புவியை கடக்க இருக்கும் இந்த விண்கல்லால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் கடைசியாக கடந்த 2008 ஜூன் மாத்தில் புவியை கடந்து சென்றது. இதனால் இதற்கு 2008 G020 என பெயரிடப்பட்டது. தற்போது நாளை புவியை கடக்க உள்ள இந்த விண்கல், அடுத்து 2034 ஜூலையில் மீண்டும் புவியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக இதுபோன்று விண்கற்கள், சில விண்மீன்கள் புவிக்கு நெருக்கமாக வருவது இயல்பானதே. சூரியனை புவியோடு சேர்ந்து இந்த விண்கற்களும் சுற்றி வருகின்றன.








