அசாம், மேற்வங்கத்தில் நாளை 3வது கட்ட வாக்குப்பதிவு

அசாம் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட…

அசாம் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அசாமில் மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதனால் இந்த மாநிலங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைகளை நேற்றோடு நிறைவடைந்தது.

அசாம்

126 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள அசாமில், நாளை 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. மொத்தமாக 337 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 25 சதவிகிதம் பெண் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த மூன்றாம் கட்டத் தேர்தலில் நாளை 79 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மேற்கு வங்கம்

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் நாளை 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 205 வேட்பாளர் போட்டியிடுகின்றனர். மேலும் வாக்களிக்க 78 லட்சத்திற்கு அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.