கணவரை ‘பேபி’ என்றழைத்த சக ஊழியர்… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்… வீடியோ வைரல்!

சிங்கப்பூரில் ஒரு தம்பதியினருக்கு இடையே நடந்த கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

சிங்கப்பூரில் ஒரு தம்பதியினருக்கு இடையே நடந்த கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் கார் நிறுத்துமிடம் அருகே நின்றுக்கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவரது மனைவி அருகிலுள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து அவரை நோக்கி கத்தினார். அந்த நபரை “பேபி” என்று அழைத்த ஒரு பெண் சக ஊழியரை பற்றி வாக்குவாதம் நடைபெற்றது.

அந்த நபரின் மனைவி, “நான் எல்லோருக்கும் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டாய்” என்று கத்தினார். அதற்கு அந்த நபர் மனைவியை மெதுவாக பேசுமாறு கூறினார்.  தொடர்ந்து, “அந்த பெண் அலுவலகத்தில் உள்ள அனைவரையும் பேபி என்றுதான் அழைக்கிறார். எல்லோரையும்,” என்று அந்த நபர் பதிலளித்தார். அந்த நபரின் மனைவி அதனை நம்பாமல், “உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.  அதற்கு அந்த நபர் “தயவுசெய்து நிறுத்து” என்று கோரிக்கை விடுத்தார்.

அவரின் மனைவி, “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எனக்குச் சொல்லவேண்டாம். நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார். பின்னர், அவள் பால்கனியில் இருந்து ஒரு தலையணையையும், மெத்தை போன்ற ஒரு பொருளையும் தூக்கி எறிந்தார். மேலும், “என் பார்வையிலிருந்து விலகிச் செல்லுங்கள். இன்றிரவு உன்னைப் பார்க்க நான் விரும்பவில்லை” என்று கத்தினார். அந்த நபர் பொருட்களை எடுத்துக்கொண்டு காரில் வைத்ததோடு வீடியோ முடிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.