மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாடுபிடி வீரர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து, தேர்தல் அறிக்கையில் திமுக அரசு தெரிவித்திருந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் காளை வளர்ப்போர்  ஆர்ப்பாட்டத்தில்…

ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து, தேர்தல் அறிக்கையில் திமுக அரசு தெரிவித்திருந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் காளை வளர்ப்போர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.  தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் போட்டிக்காக காளை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் காளைகளுக்கும் முழுவீச்சில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல்,

  • காளை உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்குதல்,
  • ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறுவர்களை களத்திற்குள் அனுமதிக்கக்கூடாது,
  • பார்வையாளர்களை பாதுகாப்புடன் அமர வழிவகை செய்தல்,
  • ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளை பிடிக்கும் போது காளை முட்டியும், காயம் அடைந்தும் உயிரிழக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணநிதி வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வீர மரணமடைந்தவர்களுக்கு 0 வா எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன்  வந்திருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.