கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து டோஸ் ஒன்றுக்கு நூறு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த மருந்து, நாடு முழுவதும் உள்ள…

கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து டோஸ் ஒன்றுக்கு நூறு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த மருந்து, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்த மருந்தை, டோஸ் ஒன்றுக்கு 400 ரூபாய் விலையில் மாநில அரசுகளுக்கு சீரம் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த விலை 300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீரம் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம், அரசுக்கு மிச்சமாகும் என தெரிவித்துள்ள அடார் பூனவல்லா, அதோடு, எண்ணற்ற உயிர்களை பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கோவிஷீல்டு மருந்தின் விலையை குறைக்க, மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.