முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியில் உள்ள ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில், நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை – ஐதரபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், 57 ரன்களும், மணிஷ் பாண்டே 61 ரன்களும் எடுத்தனர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில், ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்களையும், டூ பிளஸ்சிஸ் 56 ரன்களையும் எடுத்து அசத்தினர். இதனால், 18.3 ஒவர்களில் வெற்றி இலக்கை எட்டிய சென்னை அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும், டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Advertisement:

Related posts

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

Jeba

உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!

L.Renuga Devi

ஜிபே மூலம் ஓட்டுக்கு பணம் வழங்க திட்டமா?: தேர்தல் ஆணையத்தில் புகார்

Gayathri Venkatesan