மே-1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை

மே-1ம் தேதி முதல், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை, என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் ஒன்று முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9…

மே-1ம் தேதி முதல், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை, என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் ஒன்று முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவியதால், வகுப்புகள் மூடப்பட்டன. ஆனாலும், அலுவல் பணிக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மே ஒன்றாம் தேதி முதல், ஆசியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை, என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து, மறு அறிவிப்பு வரும் வரை, மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை, வீட்டில் இருந்தபடி ஆசிரியர்கள் தொடர்ந்து வழங்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்காக பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டு, மே கடைசி வாரத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என்றும், அதற்காக தனி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.