முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

கொரோனாவால் இறந்தவர் உடலை ஆற்றில் வீசியவர்கள் கைது!

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவரிடன் உடலை, ஆற்றில் வீசிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் ஆயிரக்கணக்கனோரின் சடலங்கள், கங்கையில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனாவால் இறந்த நோயாளியின் உடல், ஆற்றில் வீசப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் ஓடும் ராப்தி ஆற்றின் பாலத்தின் மீது, கொரோனா பாதுகாப்பு கவசம் அணிந்த இருவர், கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை சுமந்து வந்துள்ளனர். தொடர்ந்து அந்த சடலத் தை தூக்கி ஆற்றில் வீசியுள்ளனர். இதை அந்த பாலத்தில் காரில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாயின,

இந்நிலையில், ஆற்றில் வீசப்பட்ட சடலம் பல்ராம்பூர் மாவட்ட மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்ப ட்டதாகவும் அதை ஆற்றில் வீசியவர்கல் இறந்துபோனவரின் உறவினர்கள் என்பதும் தெரிவந்ததை அடுத்து, அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

பெண் ஆளுமைக்கான விருதை பெற்றார் தமிழிசை!

Jeba

இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டிய ஆப்பிள் நிறுவனம்!

Niruban Chakkaaravarthi

பள்ளிகள் திறந்த முதல்நாளே 92% மாணவர்கள் வருகை: செங்கோட்டையன்!

Jayapriya