முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்!

கொரோனா நமது மிகப் பெரிய எதிரி . நமது எதிரியை வீழ்த்த நம்மிடம் இருக்கக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

கொரோனாவால் நமது நாடு மிகவும் கடினமான தருணங்களை சந்தித்தது . பலர் தங்களது நெருங்கிய உறவுகளை இழந்துள்ளனர், அவர்களின் இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இது, கடந்த 100 ஆண்டு களில் வந்த பெரும் தொற்று ஆகும். இந்த கொரோனா காலத்தில் அதனை எதிர்கொள்ள விரைவாக நாம் சுகாதார உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தினோம்.

ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள் பற்றாக்குறை வந்தபோதிலும் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்றன. கொரோனா நமது மிகப் பெரிய எதிரி . நமது எதிரியை வீழ்த்த நம்மிடம் இருக்கக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். உலகிலேயே மிகவும் சொற்பமான எண்ணிக்கையில்தான் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது


நமது விஞ்ஞானிகள் மீது நாம் நம்பிக்கை வத்தோம், ஒரு வருடத்தில் நாம் 2 தடுப்பூசிகளை நடைமுறைக்கு கொண்டு வந்தோம். 23 கோடிக்கு மேலான தடுப்பூசிகள் தற்போது வரை செலுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதனை கைவிட்டு விடக் கூடாது. தடுப்பூசி விநியோகம் இன்னும் அதிகரிக்கப்படும்.

கூடுதலாக இன்னும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்காட்டுக்கு வரவுள்ளது. வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்து வழங்கும் பணியை செய்து வருகின்றன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் வழியாக தடுப்பூசி தயாரிக்க நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

. தேவையான அளவு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று புதிய தடுப்பூசிகளுக்கான சோதனைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. தடுப்பூசி தொடர்பான மாநிலங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது. தடுப்பூசி வாங்குவது எவ்வளவு கடினம் என்பதை மாநிலங்கள் தற்போது உணர்ந்துள்ளன
. தடுப்பூசி விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன. மத்திய அரசே மாநிலங்களுக்காக 75 சதவிகித தடுப்பூசியை வாங்கும் ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். ஒருங்கிணைந்த தடுப்பூசி கொள்கைகளை கொண்டு வந்தது மத்திய அரசு. தனியார் மருத்துவமனைகள் 25% தடுப்பூசிகளை நிறுவனங்களிடம் இருந்து வாங்கலாம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Advertisement:

Related posts

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள ரூ.25கோடி ஒதுக்கீடு!

Karthick

கர்ணனுக்கு நடுக்கடலில் கட் அவுட்; அசத்திய புதுவை ரசிகர்கள்!

Karthick

புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம்!

Karthick