முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 448 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 56 ஆயிரத்து 681 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து குணமடைந்து 31 ஆயிரத்து 360 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19 லட்சத்து 97 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 351 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 356 அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1530 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். 3713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டில் 837 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 306 பேருக்கும் திருவள்ளூரில் 436 பேருக்கும் திருச்சியில் 548 பேருக்கும் கோவையில் 2564 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

இத்தாலி பிரதமர் காண்டே ராஜினாமா!

Niruban Chakkaaravarthi

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை!

Gayathri Venkatesan

புத்தாண்டு அன்று வாகனங்களில் சாகச முயற்சிகளில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல்!

Saravana