திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மர்ம வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கோவில் நாழிக்கிணறு கடற்கரை பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக்கூடிய மர்மமான வெடிபொருள் ஒன்று கிடந்தது.
இதனையும் படியுங்கள்: பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ்7 தமிழின் கோயில் விருதுகள்-2023
இது குறித்து பக்தர்கள் கோயில் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கால்துறையினர் வெடிகுண்டு
நிபுணர்களுடன் அந்த வெடிபொருளை கைப்பற்றி சோதனை செய்தனர்.
கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா? அல்லது திருவிழாவின் போது போடக்கூடிய வெடி பொருளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகழ்பற்ற கோவில் கடற்கரைப்பகுதில் மர்ம வெடி பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கடந்த இறுதி தினங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நட்டு வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– யாழன்