கள்ளக்குறிச்சி வன்முறை; வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்க டிஜிபி உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்கக் கூறியும், கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கக் கூறியும், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.…

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்கக் கூறியும், கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கக் கூறியும், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கன்னியாமூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார்ப் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாகக் கூறிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி பெரும் கலவரம் நிகழ்ந்தது. கலவரத்தைத் தொடர்ந்து ஜூலை 31-ஆம் தேதி வரை 141 தடை விதித்து மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசி எடுக்க மாற்றி காவல்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அண்மைச் செய்தி: ‘திருமணத்தை மீறிய உறவு; கத்தி குத்தில் முடிந்த சோகம்’

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள டிஐஜி பிரவீன்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதில் ராதாகிருஷ்ணன், கிங்கஷ்ளின், திருமால், முத்து மாணிக்கம், சந்திரமௌலி உள்ளிட்ட 5 உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பான விசாரணையைத் தொடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்கக் கூறியும், கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கக் கூறியும், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.