Space Research-ல் ஐ.ஐ.டி., நிர்வாகம் அதிகளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளதாக ஐஐடி இயக்குநர் காமகோடி வீழிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி வீழிநாதன் அளித்த பேட்டியில், தொடர்ந்து 7-வது ஆண்டாக பொறியியல் கல்வி நிறுவனப் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பிடித்துள்ளது. 4-வது ஆண்டாக ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பெற்றுள்ளது. இது மகிழ்ச்சிக்குரியது. 5 வகைகளில், 100 விதமான தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. NIRF தரவரிசையால், உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் தரத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த முறை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் NIRF தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
NIRF தரவரிசை, எதிர்காலத்தில் சர்வதேச உயர்கல்வி நிறுவன தரவரிசைப்
பட்டியலாகவும் உருவெடுக்கும். ஆன்லைன் கல்விக்கான முக்கியத்துவம் உலகளவில் உருவாகிறது. ஏற்கனவே ஆன்லைன் கல்வியில் சிறந்து விளங்கும் சென்னை ஐ.ஐ.டி., க்கு இந்த வாய்ப்பு நிச்சயம் பலனளிக்கும். வருடத்துக்கு 7 லட்சம் பேர் சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆன்லைன் கல்வி மூலம் பலனடைகின்றனர். ஆன்லைன் கல்வி சென்னை ஐ.ஐ.டி.,க்கு முக்கிய பலம். இந்த ஆண்டில் 200-க்கும் மேல் காப்புரிமை கோரப்பட்டுள்ளது. அதில் 170 வகையான பொருட்கள், தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. கொரோனாவால் ஐ.ஐ.டி.யின் காப்புரிமை பெறுவது, ஆராய்ச்சி பாதிக்கப்படவில்லை. பிற கல்லூரிகளும், தங்கள் Idea-க்களை செயல்படுத்தி அதற்கு காப்புரிமை (Pattern Right ) பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் தேசத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கான தொழில்நுட்பங்களை உருவாக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 1.34 லட்சம் பேர் சென்னை ஐ.ஐ.டி.யின், Out of The Box திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அரசுடன் ஐ.ஐ.டி., நிர்வாகம் நல் உறவில்தான் இருக்கிறது.
6G தொழில்நுட்பம் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்து அமையப்போகிறது. Rapid Launch Facility-க்கு Agni Goal என்று ஒரு திட்டம் வைத்துள்ளோம். 3D Printing முறையில் 72 மணி நேரத்தில் 3 Rocket Engine தயாரிக்க ஐ.ஐ.டி., முயற்சி எடுக்க உள்ளது. Space Research-ல் ஐ.ஐ.டி., நிர்வாகம் அதிகளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளது. ஹைப்பர்லூப் ஆராய்ச்சியிலும் ஐ.ஐ.டி., கவனம் செலுத்த உள்ளது. வீடுகளை 3D Printing முறையில் கட்டும் தொழில்நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்டவற்றிலும் அதிகளவிலான ஆராய்ச்சிகளை சென்னை ஐ.ஐ.டி., முன்னெடுத்துள்ளது.
Sustainable Development Goal என்று 17 இலக்குகளை அடைவதில் ஆராய்ச்சிகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Solar, Battery ஆற்றல், காற்று மாசுவை குறைத்தல் உள்ளிட்டவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. Sustainable Energy-ல் B.Tech., படிப்பைத் தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஐ.ஐ.டி.யில் முழுவதும் மறுசுழற்சி நீரே பயன்படுத்தப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துவிட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஐ.ஐ.டி., மாணவர்கள் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளவோ, உருவாக்கிக் கொள்ளவோ செய்கின்றனர்.
-ம.பவித்ரா








