திருமணத்தை மீறிய உறவு; கத்தி குத்தில் முடிந்த சோகம்

சென்னையில் திருமணத்தை மீறிய உறவிலிருந்து விலக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட தகராறில் விருகம் பாக்கம் சின்மையா நகரைச் சேர்ந்த சாந்தி உயிரிழந்துள்ளார். சென்னை, போரூர், கங்கா நகர், சரஸ்வதி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபனுக்கும்…

சென்னையில் திருமணத்தை மீறிய உறவிலிருந்து விலக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட தகராறில் விருகம் பாக்கம் சின்மையா நகரைச் சேர்ந்த சாந்தி உயிரிழந்துள்ளார்.

சென்னை, போரூர், கங்கா நகர், சரஸ்வதி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபனுக்கும் (வயது 59), விருகம் பாக்கம் சின்மையா நகரைச் சேர்ந்த சாந்திக்கும் (வயது 48) கடந்த 10 ஆண்டுகளாகத் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த தொடர்பு பார்த்திபனின் குடும்பத்தாருக்குத் தெரிய வந்ததையடுத்து, சாந்திக்கு ஒரகடம் எழுச்சூர் அருகே 1200 சதுர அடி இடம் கொடுத்து பார்த்திபனிடம் இருந்து விலகுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த இடம் பிடிக்கவில்லை எனக்கூறி, 6 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் எனச் சாந்தி கேட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘2021-22ம் ஆண்டில் 78 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது’ – மத்திய அரசு’

இதையடுத்து, விருகம் பாக்கம் பள்ளி முதல் குறுக்கு தெருவில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த இடத்திற்குப் பதிலாக ரூபாய் 2 லட்சம் கொடுப்பதாகப் பார்த்திபன் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால், அந்த தொகையைச் சாந்தி ஏற்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பார்த்திபன் மறைத்து வைத்திருந்த கத்தியால், சாந்தியின் கழுத்தில் குத்தியுள்ளார். அப்போது, சாந்தி மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தடுக்க முயன்றபோது சாந்தியின் மகள் வெண்பதி (வயது 28) மற்றும் மருமகன் ஆறுமுகம் (வயது 28) இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தி, சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து விருகம் பாக்கம் போலீசார் இந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்து பார்த்திபனைச் சிறையில் அடைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.