திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் – அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் ஆதாரங்களோடு வெளியிடபடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருச்சி ஜங்சன் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி…

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் ஆதாரங்களோடு வெளியிடபடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருச்சி ஜங்சன் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பாரதிய ஜனதா
கட்சியின் இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  ஆன்லைன் விளையாட்டு கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது கருத்து. எதற்காக ஆளுநர் ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்திநரை சந்தித்தார் என்பது எங்களுக்கு தெரியாது.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க உள்ளனர் என தகவல் வெளி வருகிறது. சமீபத்தில் கனிமொழிக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் பா.ஜ.க காலம் காலமாக கூறுவது போல் திமுக ஒரு குடும்ப ஆட்சி என்பது தெரிய வருகிறது.

அம்பேத்காருக்கு காவி பூசுவது கண்டிக்கத்தக்கது என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு? தேசத்தை நேசிக்கும் அனைவருக்கும் காவி சொந்தம். காவி என்பது எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல என்பது என் கருத்து. விரைவில் திமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதராத்தோடு நாங்கள் கொண்டு வருவோம். ஐ.டி பிரிவு நிர்மல் குமார் தலைமையில் ஆதரத்தோடு நாங்கள் வெளி கொண்டு வர உள்ளோம்.

 

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட பாதை சேதம்? அப்படி பார்த்தால் வடக்கு மாநிலங்களில் எவ்வளவோ தற்காலிக பாலம் உள்ளது. அவை எல்லாம் எதுவும் ஆகவில்லை. இது தவறு, நாங்கள் திருத்தி கொள்கிறோம் என்று கூற திமுகவினர் ஏன் மறுக்கின்றனர். இந்த பக்குவம் ஏன் இல்லை. இந்த அரசு எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

புயல் நேரங்களில் தமிழக அரசை கண்டிப்பாக விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து இது போன்று அதிக புயல்கள் ஏற்படுகிறது. பேரிடர் மேலாண்மைக்கு தமிழக அரசு தனி அங்கீகாரம் கொடுக்க வேண்டும். மதுவிலக்கு பாஜகவிற்கு பிரச்சினையே இல்லை. படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும். அரசு வேறு வழியில் வருவாயை பெற்று கொள்ள வழி வகை செய்ய வேண்டும். ஒவ்வொரு பட்ஜட்டிலும் 20% மது விலக்கை கொண்டு வாருங்கள். முதல்வரை நான் பாராட்டுவேன்.

சூர்யா சிவா விலகும் போது கருத்து தெரிவித்தார். அது அவர் கருத்து. விஸ்தாலமான பார்வையில் அவர் பார்த்தால் அவருக்கு அப்படி தெரியாது. அரசியலில் கண்களை கட்டி விட்டு யானை தொடு என்றால், தும்பிக்கையை பாம்பு என்பார்கள். சூர்யா சிவாவிற்கு அரசியலை விசாலமாக பார்க்கும் பார்வை இல்லை.

லாலு பிரசாத் ஊழல்வாதி தான். ஆனாலும் அவர் திறமை வாய்ந்த அரசியல் தலைவர். அவரது மனைவி முதல்வர், மகன் துணை முதல்வர் என குடும்பத்தினரே பதவிகளை ஆக்கிரமித்தனர். ஒருவருடைய அரசியல் வாழ்க்கை மண், மக்கள் நலம் சார்ந்து இருக்க வேண்டும் அவ்வாறு இல்லையெனில் அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியம் ஆகிவிடும். இதற்கு லல்லு பிரசாத் உதாரணமாகிவிட்டார். தமிழகத்திற்கும் இது பொருந்தும்.

காவி நிறம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதனை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை. பாஜக நிறம் காவி தான் என விசிக தான் கூறி வருகிறது. காவி நிறம் பொதுவானது காவியை நேசிப்பவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள்.

முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் அரசியல் தலையீட்டில் உள்ளனர்.
முதலமைச்சரின் குடும்பத்தில் உள்ள பலரும் முதலமைச்சராக வேலை பார்க்கின்றனர். முதலமைச்சரின் மருமகனின் தலையீடு துறைகளிலும் உள்ளது. நான் பதவிக்காக வேலை செய்பவன் அல்ல என அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.