உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி தொற்றுப் பாதிப்பு நான்கு லட்சத்தை தாண்டி யிருக்கிறது.
இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு, ஒரு கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15.19 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் 15 கோடியே 19 லட்சத்து 91 ஆயிரத்து 828 பேருக்கு கொரோனா தொற்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 12 கோடியே 92 லட்சத்து 62 ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை 31 லட்சத்து 93 ஆயிரத்து 050 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் புள்ளிவிவரம் நாளுக்கு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.







