முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி அளித்த ஷிகர் தவான்!

டெல்லி கேபிடல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்காக ரூ .20 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. மேலும் பல சர்வதேச பிரபலங்கள் முதல் இந்திய பிரபலங்கள் வரை நிதியுதவி வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் ஐபிஎல் டெல்லி அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ. 20 லட்சம் நிதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் ஐபிஎல் போட்டிகளில் வென்ற அனைத்து பரிசு தொகையையும் அளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நாம் இப்போது மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாகவும், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் கொரோனா பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாம் அனைவரும் தேவை இல்லத் பயணத்தை குறைத்து கொள்ளவேண்டும் எனவும் அனைவரும் வெளியே பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைப்பிடைத்தல், சானிடைசர் உள்ளிட்டவற்றை முறையாக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேதவ் உனத்கட் தனது ஐபில் வருமானத்தில் இருந்து 10 சதவித வருமானத்தை கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ezhilarasan

பாரத ரத்னா வழங்கக் கோரும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்: ரத்தன் டாடா வேண்டுகோள்!

Nandhakumar

தமிழக முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

Karthick