தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!

கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும்…

கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த இடங்களான 765 இடங்களில் 22,905 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிரமம் மற்றும் நகர் புறங்களில் உள்ள தெருக்களில் குறைந்தது 30 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெறப்பட்ட மாதிரிகள் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் கோவை ஆகிய 6 இடங்களில் உள்ள பரிசோதனை மையங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 5,316 நபர்களிடமிருந்து, 22,905 மாதிரிகள் பெறப்பட்டதில் 23% மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது எனவும், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49% பேருக்கும், குறைந்தபட்சம் நாகை மாவட்டத்தில் 9% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

முன்னதாக முதல் ஆய்வு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது. அப்பொழுது, 22,690 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 31% நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பெரம்பூர் மாவட்டத்தில் 49% ஆகவும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 13% ஆகவும் இருந்தது.

குறிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு நோய் எதிர்ப்பு சக்தி 31% லிருந்து 23% ஆக குறைந்துள்ளது. இதற்கு 5மாத இடைவெளிக்கு முன்னதாக ஆய்வு மேற்கொண்டு தான் காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் மீண்டும் இந்த ஆய்வு நடத்தப்படும் எனவும், அப்பொழுது 18 வயதுக்கு மேல் தடுப்பூசி செலுத்திய அனைவரும் உட்படுத்தப்படுவர் என்று கூறியுள்ளார்.

இதே போன்று தமிழகத்தில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பெங்களூர் ஆய்வகம் உறுதி செய்துள்ளது என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.