சென்னை வந்தடைந்தன 3 லட்சத்து 14 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !

புனேவில் இருந்து விமானம் மூலம் 27 பெட்டிகளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த…

புனேவில் இருந்து விமானம் மூலம் 27 பெட்டிகளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சிறப்பு முகாம்களை அமைத்து பொது மக்களுக்கு தடுப்பூசியை போட்டு வருகிறது. இதனால் தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து ஜுன் மாதத்தில் 42 லட்சத்தி 58 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் செய்த 1 கோடியே 26 லட்சத்தி 8 ஆயிரத்தி 220 என கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 18 லட்சத்தி 24 ஆயிரத்தி 53 பேர் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் புனேவில் இருந்து விமானத்தில் 27 பெட்டிகளில் 3 லட்சத்தி 14 ஆயிரத்தி 110 கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசிகள் தேனாம்பேட்டை மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.