கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் கும்பகோணம் மாவட்ட போராட்டக்குழு சார்பில் இன்று அரசு தலைமை கொறடா கோவி செழியனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை ஒன்றுசேர்த்து கும்பகோணம் மாவட்டம் என அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கும்பகோணம் மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் திமுக தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ளது. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கும்பகோணம் மாவட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் கும்பகோணம் மாவட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க. ஸ்டாலின் ,தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியனிடம் இன்று மாவட்ட கோரிக்கை தொடர்பான மனு அளித்தார்.