நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.
கொரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், கோதுமை மாவு, உப்பு, ரவை, புளி உள்ளிட்ட 13 வகையான மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வரும் 5-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியாயவிலைக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, டோக்கன் அடிப்படையில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. 4 நாட்கள் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெறும் என்றும், சனிக்கிழமை முதல் மளிகைப் பொருட்களை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.