தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக, சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள், முதலமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுவரும் மின்சார வாகன உற்பத்தி மையம், இந்த ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும் என அவர் குறிப்பிட்டார். இங்கு, ஆண்டுக்கு 1 கோடி மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், 2 விநாடிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தென்மாவட்ட தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகரில் சிப்காட் துவக்கப்பட இருப்பதாகவும், தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா மற்றும் ரிபைனரி வர இருப்பதாகவும் தெரிவித்தார்.