அழிவின் விளிம்பில் ஆப்பிரிக்க யானைகள்!

ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழ்ந்துவரும் நீளமான தந்தங்கள் கொண்ட சவான்னா இன யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானை இனங்கள் தொடர்ந்து அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க மற்றும்…

ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழ்ந்துவரும் நீளமான தந்தங்கள் கொண்ட சவான்னா இன யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானை இனங்கள் தொடர்ந்து அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்க மற்றும் ஆசியக் கண்டங்களில் யானைகளுக்கு என்று ஒரு தனி வரலாறு உண்டு. சவான்னா வகை யானைகள் பெரும் தந்தங்களையும் தடிமனான தோல் அமைப்பைக் கொண்ட யானையாகும். மற்றொரு இனமான ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் சிறிய அளவில் கருமையான தோற்றத்தைக் கொண்டவையாகும்.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு (International Union for Conservation of Nature) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சவான்னா மற்றும் காட்டு இன யானைகள் ஆபத்திலிருக்கும் வன விலங்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த யானைகள் அழியும் விளிம்பில் உள்ள விலங்குகளின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய (ஐ.யு.சி.என்) சங்கத்தின் தொழில் நுட்ப வல்லுநர் காத்லீன் கோபுஷ் “இந்த இரு வகை யானைகள் அழிவதைத் தடுக்க வேண்டுமானால் தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுவது, யானைகளைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதற்கு சர்வதேச அளவில் கவனம் தேவைப்படுகிறது. அப்போது ஆப்பிரிக்கக் காடுகளை உருவாக்கிய யானைகளைக் காப்பாற்ற முடியும்” என்றார்.
யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுதல் மற்றும் காடுகளை அழிப்பது போன்ற காரணங்களால் கடந்த 2007- 2014 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் சவான்னா யானைகளின் எண்ணிக்கை 30% வரை குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்காவிட்டால் மேலும் இந்த இருவகை யானைகள் முழுவதுமாக அழியும் அபாயம் நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். இது போன்ற வன விலங்குகளை அழிக்கும் செயல்களைத் தடைசெய்வதே வன விலங்குகளைத் தடுக்கும் வழியாக அமையும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.