முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனையேற்று, தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியத்தை கணக்கிட்டு, அவர்களின் சம்பளத்தில் இருந்து அதை பிடித்தம் செய்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் வங்கிக் கணக்குக்கு செலுத்த வேண்டும் என்று கருவூலத்துறைக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

தேர்தல் பரப்புரைக்குத் தடை: போராட்டத்தைத் தொடங்கிய மமதா பானர்ஜி

Gayathri Venkatesan

கோவா சர்வதேச திரைப்பட விழா: அசுரன், கப்பேலா, சுச்சேரா ஆகிய படங்கள் தேர்வு!

Saravana

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!

Jayapriya