நிவாரண நிதி டோக்கன் முறையில் எந்த பிரச்னையும் இல்லை : அமைச்சர் ஐ.பெரியசாமி

கொரோனா நிவாரண நிதியை வழங்கும் டோக்கன் முறையில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவல் வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு…

கொரோனா நிவாரண நிதியை வழங்கும் டோக்கன் முறையில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவல் வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா நிவாரன நிதியாக குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். நிவாரண நிதி பெற குடும்ப உறுப்பினர்களே டோக்கன் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும், ஒருநாளைக்கு தலா 200 குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா நிவாரண நிதி அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது கூட்டுறவுத்துறையின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.