முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மீண்டும் களமிறங்கும் கொரோனா? கோவா சென்று வந்த திருச்சி இளைஞர் பலி.!

பெங்களூருவில் பணியாற்றி, கோவாவிற்கு சுற்றுலா சென்று வந்த திருச்சியை சேர்ந்த இளைஞர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாகவே குறைந்திருந்தது. இருந்தும் உருமாறி வரும் ஒமிக்ரைன் வகை தொற்று அதிகளவில் பரவி வருவதாகவும், மக்கள் எப்போதும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டி சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவ்வப்போது அறிவுறுத்தி வந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு, கொரோனா தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவை சேர்ந்த இளைஞர் ஓருவர் பெங்களூரில் மென்பொறியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் சுற்றுலா செல்வதற்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கோவா சென்று உள்ளார். ஒன்றிரண்டு நாட்கள் அங்கையே தங்கை கோவாவை சுற்றி பார்த்துவிட்டு, குடுமபத்தினருடன் மீண்டும் தந்து சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கோவாவில் இருந்து திருச்சி திரும்பிய அந்த இளைஞருக்கு கடும் வயிற்றுப்போக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள தனியார் (ஜி வி என்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த இளைஞருக்கு, மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.கொரனா தொற்று உறுதி செய்வதற்கு முன்பே அவர் நேற்று காலை இறந்துவிட்டார். மேலும் நேற்று இரவு கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கூறுகையில், பெங்களூருவில் பணியாற்றி வந்த, மென்பொறியாளர் இளைஞர் சுற்றுலா செல்வதற்காக கோவா சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இங்கு அவருக்கு உடல் உபாதை காரணமாக திருச்சி தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருடன் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் ஒருநாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லை. மேலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு – நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

EZHILARASAN D

3-வது அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர்

தங்கலான் படத்தில் இணைந்த இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன்

Yuthi