பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள் – காஸ்மோஸ் வெப் வெளியிட்ட ஆச்சர்யத்தக்க படங்கள்

பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள்  மற்றும் விண்மீன் இணைப்புகள் அடங்கிய படங்களை காஸ்மோஸ் வெப் வெளியிட்டுள்ளது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து…

பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள்  மற்றும் விண்மீன் இணைப்புகள் அடங்கிய படங்களை காஸ்மோஸ் வெப் வெளியிட்டுள்ளது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து எடுக்கப்பட்ட படத்தை கடந்த ஆண்டு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டது. ஹபுள் ஸ்பேஸ் தொலைநோக்கிக்கு அடுத்தகட்டமாக நிறுவப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 2021ம் வருடம் 10 பில்லியன் டாலர் செலவில் நிறுவப்பட்டது.

இந்தத் தொலைநோக்கிக்கு இரண்டே இலக்குகள்தான். ஒன்று, 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிரபஞ்சம் தோன்றிய தருணத்தில் உருவான நட்சத்திரங்களைக் கண்டறிவது. இரண்டாவது, தொலைதூரத்தில் மனிதர்கள் வாழத்தக்க கிரகங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்வது.

அவ்வபோது அசத்தலான ஆச்சர்யதக்க படங்களை வெளியிட்டு வந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் COSMOS-Web (காஸ்மோஸ்) எடுத்துள்ள  படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் இணைப்புகள் போன்ற பல்வேறு விண்மீன் திரள்களின் புதிய தோற்றங்கள் அப்படங்களில் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், இயற்கை அறிவியல் கல்லூரி மற்றும் மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் (MIRI) ஆகியவை ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் விண்வெளியில் உள்ள மொசைக் புகைப்படங்களை வெளியிட்டது. அவை COSMOS-Web விஞ்ஞானிகளின் முயற்சியில் கிடைத்தன.

https://twitter.com/TexasScience/status/1633865594968604685?cxt=HHwWmoCw7cOG1KwtAAAA

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் இணைப் பேராசிரியரும், COSMOS-Web இன் இணை முதன்மை ஆய்வாளருமான கெய்ட்லின் கேஸ்லே இதுகுறித்து தெரிவித்ததாவது “இந்த COSMOS-Web இன் முதல் ஸ்னாப்ஷாட்டில் சுமார் 25,000 விண்மீன் திரள்கள் உள்ளன. இதுவரை எடுக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படங்களில் இதுவும் ஒன்று. விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை கிடைத்த தரவுகள் வெறும்  4 சதவிகிதம் மட்டும்” என தெரிவித்துள்ளார்.

-யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.