மனிதநேயத்தைப் போற்றி பாதுகாக்கும் விதமாக காவல்துறை தம்பதியினர் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு தங்கள் மாத ஊதியத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டை பெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் வசித்து வரும் அன்பு அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவியும், விளாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கொரோனா பரவலால் உதவி கிடைக்காமல் தவித்து வந்த பள்ளபட்டியில் செயல்பட்டுவரும் புது விடியல் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கியுள்ளனர். கடும் பணிச் சூழலிலும் ஆதரவற்றோர் மீது அன்பு காட்டிய காவல்துறை தம்பதியின் செயல் மகிழ்ச்சியளிப்பதாக, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காவல்துறையினர் பணி ஊர் அடங்கில் மிக அதிகமாக இருக்கும். இந்த சூழலில் குடும்பம் பணி இவற்றோடு சமூக சேவையையும் இந்த காவல்துறை தம்பதியினர் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றனர்.