முக்கியச் செய்திகள் குற்றம்

சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!

கடலூர் அருகே சானிடைசரை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போலி மது தயாரித்த உத்திராபதி, ரகுபதி, தண்டபாணி உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

மேலும் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 360 லிட்டர் சானிடைசர், 2500 போலி மதுபாட்டில்கள், பேக்கிங் இயந்திரங்கள், ஒரு மினி வேன், ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Related posts

சென்னை வந்த 7-வது ஆக்சிஜன் ரயில்!

“ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

Jeba

தமிழக – கேரள எல்லையில் இ.பாஸ் நடைமுறை அமல்!

Karthick