முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்; யார் இந்த அஜாஸ் படேல்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் சாதனை படைத்துள்ளார். யார் இந்த அஜாஸ் படேல் என விரிவாக பார்க்கலாம்.

கிரிக்கெட்டின் தாய் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டுமொரு அதிசயம் நடந்திருக்கிறது..டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸ்ஸில், எதிரணியின் பத்து விக்கெட்டுகளையும் ஒரு தனி நபர் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது..

இப்படிப்பட்ட அரிய சாதனையை இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நிக்ழ்த்தியிருக்கிறார் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த இடது கை ஸ்பின்னரான அஜாஸ் படேல்..டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை நடத்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பாக 1956-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜிம் லேகர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், 1999-ம் ஆண்டு இந்திய அணியைச் சேர்ந்த அனில் கும்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

21 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அஜாஸ் படேல். அயல்நாட்டு மண்ணில் இந்த சாதனையை புரியும் முதல் வீரர் இவரே என்ற சாதனையை தனதாக்கியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 110 ஒவர்கள் வீசப்பட்டுள்ளது. அதில் கிட்டதட்ட 50 சதவீத ஓவர்களை அஜாஜ் படேல் ஒரு ஆளே வீசியது, இவரின் ஆதிக்கத்தை காட்டுகிறது. மேலும், 85-வது ஒவரில் தொடங்கி ஆட்டம் முடியும் வரை தொடர்ந்து ஒரு புறம் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் மும்பையில் பிறந்து வளர்ந்த அஜாஸ் படேல், தனது 8 வயதில் குடும்பத்துடன் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தார். இருந்தபோதும் கிரிக்கெட் மீதான தனது காதலை கைவிடாமல், ஆக்லாந்தில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு ஒரு முழுமையான் கிரிக்கெட் வீரராக மாறி, தான் பிறந்த மண்ணிலேயே இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அஜாஸ் படேல்.

இந்த அரிய சாதனை புரிந்த அஜாஸ் படேலிற்கு கிரிக்கெட் உலகிலிருந்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சாதனையை ஏற்கனவே நிகழ்த்தியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே “Welcome to the club” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

சந்தோஷ், நியூஸ் 7 தமிழ்

Advertisement:
SHARE

Related posts

ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில்,190 நாடுகளில் வெளியாகிறது!

Gayathri Venkatesan

தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்

Ezhilarasan

“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்

Saravana Kumar