செங்கல்பட்டு சத்ய சாய் மருத்துவ கல்லூரியில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, நாடு முழுவதிலும் 3,805 புதிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 4,30,98,743 ஆக உயர்ந்துள்ளது. 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,024 ஆக உள்ளது. 3,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 4,25,54,416 பேர் மீண்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் ஒருவர் என மொத்த கொரோனா பாதிப்பு 217 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து செங்கல்பட்டு சென்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த கல்லூரியில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் சத்யசாய் மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளை தனியார் கல்லூரி நிர்வாகம் முழுமையாக 1 வாரம் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அனைவரும் 2வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் உடனடியாக செலுத்தி கொள்ள வலியுறுத்தியுள்ளார்.