முக்கியச் செய்திகள் Health

பெண்களின் கர்ப்பம் கண்டறியும் முறை

கர்ப பரிசோதனை செய்வது எப்படி என்ற குழப்பத்திற்கு தீர்வு கொடுக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இன்றைய கால சூழலில் பெண்கள் அதிகம் படிக்கிறார்கள், சிறிய வேலை தொடங்கி, அவரவர் தகுதிக்கேற்ப உயர்ந்த பொறுப்புகளுக்கு செல்கிறார்கள். ஆனால், பெண்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை கொள்கிறார்களா என்றால் மிகப் பெரிய கேள்விக் குறிதான். இப்போது தான் சிறிய அளவில் அதுவும் நகரத்தில் வாழும் பெண்களுக்கு, தன் உடல் ஆரோக்கியம் சார்ந்த அக்கறை கொள்ளுதல் என்ற விழிப்புணர்வு ஓரளவிற்கு எட்டிப்பார்க்கிறது . பெண்கள் பூப்பெய்த பிறகு மாதாந்திரம் சந்திக்கும் மாதவிடாய் தொடங்கி, அதன் இரத்த போக்கின் அளவு என எல்லாவற்றிற்கும் பல சந்தேகங்கள் எழும். வெளி உலகை அறிவை பெறுக்கும் பெண்கள் தொடங்கி படிப்பறிவின் வாசம் அறியாத பெண்கள் வரை தன் உடல் சார்ந்து வரக் கூடிய சந்தேகங்கள் ஒவ்வொன்றும் வினோதமானவை. அது குறித்து விளக்கம் பெறுவதிலும் பல கட்ட குழப்பங்கள் ஏற்படுவது வழக்கமானது.

இதற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லனுமா என்று பூப்பெய்வதில் தொடங்கும் இத்தகைய சந்தேகங்கள் அதிகரிப்பது பெண்கள் கருவுறும் காலங்களில் தான். அப்படியான கர்ப்ப கால சந்தேகங்களை ஒளிவு மறைவின்றி விரிவாக விளக்குவதற்கான முயற்சியாக இந்த தொடர் கட்டுரை எழுதப்பட உள்ளது. முதலில் கர்ப்பம் அடைந்தோமா இல்லையா என்பதை பெண்கள் தெரிந்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளே அலாதியானது தான். அந்த காலம் போல ஊரில் இருக்கும் பிரசவம் அனுபவமிக்க முதியதோர் பாட்டியிடம் பெண்ணின் கை நாடி பிடிக்கச் சொல்லி கர்ப்பத்தை அறியும் காலம் மாறி இன்றைக்கு கர்ப்ப சோதனை ஸ்ட்ரிப் மூலம் பெண்கள் கருவுற்றிருக்கிறோமா என மிக சுலபமாக அறிந்துக் கொள்ள முடிகிறது. இந்த கர்ப்ப பரிசோதனை ஸ்டிரிப் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

திருமணம் ஆன பெண்கள் தாங்கள் கருவுற்றிருக்கிறோமா என்று சரியாகத் தெரியாமல் பல நேரங்களில் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு முன்பு இந்தகுழப்பத்திலயே இருக்கும் பெண்கள் அதிகம். இன்றைய அறிவியல் உலகில், மாதவிடாய் தள்ளி போனால், கர்ப்பம் குறித்த குழப்பம் இயல்பாக எழுவதாக நாம் நடைமுறையில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்ற குழப்பங்களை போக்க அறிவியல் பல முறைகளை நமக்கு தந்துள்ளது. இருந்தாலும், விட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்யும் முறையே பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த முறை பயன்படுத்த எளிமையாக இருப்பதாலும், சுயமாக பரிசோதனை செய்து முடிவை தெரிந்துகொள்ளும் வகையில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

கர்ப்ப பரிசோதனை கிட்:

கர்ப்ப பரிசோதனை கிட்டை எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வி, புதியதாக இந்த கிட்டை பயன்படுத்தும் அனைவருக்கும் எழும் இயல்பான கேள்விதான். மருந்து கடைகளில் கிடைக்கும் ( pregnancy test strip ) கர்ப்ப பரிசோதனை ஸ்ட்ரிப், என்பது ரூபாயிலிருந்து கிடைக்கிறது. கம்பெனியை பொருத்து இதன் விலை மாறுபடுகிறது. இந்த ஸ்ட்ரிப்பை வாங்கி, காலையில் எழுந்த பின்னர் சிறுநீர் கழிக்க போகும் போது அந்த ஸ்ட்ரிபை பயன்படுத்தி முடிவை பெண்கள் அறிந்துகொள்ள முடியும். கர்ப்பம் குறிந்து அறிந்துக் கொள்ள விரும்பும் பெண் காலையில் தான் கழிக்கும் முதல் சிறுநீரை கொஞ்சம் எடுத்து, ஸ்ட்ரீப் நடுவில் இருக்கும் சிறிய துளையினுள் 2 சொட்டு இட வேண்டும். 2 நிமிடங்களுக்கு பின்னர் அந்த ஸ்ட்ரிப்பில் காணப்படும் ஸ்கிரீன் போன்ற பகுதியில் ஒரு கோடு தெரிந்தால் கர்ப்பம் இல்லை என்று தெரிந்துகொள்ளலாம். அதுவே இரண்டு கோடு காணப்பட்டால் கர்ப்பம் உறுதி என துல்லியமாக எடுத்து கொள்ளலாம்.

இந்த முடிவு, சிறுநீர் துளிகளை கர்ப்ப பரிசோதனை ஸ்ட்ரிபில் விட்ட 2 நிமிடம் முதல் 5 நிமிடங்களுக்கு உள்ளாக கிடைக்கும் முடிவு மட்டுமே சரியான முடிவாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், சிறுநீரை சேமிக்கும் போது சுத்தமான கப் கொண்டு சேமிப்பதால், துல்லியமான முடிவை நாம் தெரிந்துகொள்ள முடியும். மேலும், கர்ப பரிசோதனை, ஸ்கேன் – யூரின் டெஸ்ட் – இரத்த பரிசோதனை என பல வழிகளில் கண்டறியப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

சிறார்களுக்கு தடுப்பூசி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Saravana Kumar

’எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், கொரோனா தடுப்பு பணியில் எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை’: கோவையில் முதல்வர் பேட்டி

Halley Karthik

சொத்துவரி விவகாரம்; அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

Arivazhagan CM