முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, சடலங்கள் வரிசையாக காத்திருப்பதை தடுக்க, தாற்காலிக தகன மேடை அமைக்க வேண்டும் எனவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள்வது தொடர்பாக, மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உயிரிழந்தவரின் உடல்களை தொடாமல் நடைபெறும் மதசடங்குகளை நடத்த, உறவினர்களுக்கு அனுமதி அளிக்கலாம் எனவும், இறந்தவரின் உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய முடியாதபோது, அவரின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை கருத்தில் கொண்டு மாநில அல்லது உள்ளாட்சி நிர்வாகம் இறுதிச்சடங்கை மேற்கொள்ள வேண்டும்.

மின்மயானங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் கண்ணியத்தை மீறும் வகையில் மொத்தமாக உடல்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் வகையில், அவர்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்றும், உடல்களை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயானத்தில் பணி புரிபவர்களுக்கு போதிய ஊதியம் வழங்க வேண்டும். தடுப்பூசி போடுவதில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ள தேசிய மனித உரிமை ஆணையம்,இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Related posts

மாநில, மத்திய அரசின் உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

லட்சத்தீவில் உள்ள இஸ்லாமியர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முகமது அபுபக்கர்

Vandhana

ஊரடங்கில் உயரும் பெட்ரோல்:சென்னையில் சதம் அடிக்க உள்ளது