தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 31,892 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை முதல் 24ம் தேதிம் வரை அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவதற்கு இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்படுகிறது. அதற்கான பிரத்யேக இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள லிங்-https://eregister.tnega.org
மேலும் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு வெளியிலும் அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயணம் செய்வதற்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளான திருமணங்கள், இறப்பு மற்றும் முதியோர்களைப் பராமரிக்கும் தேவைக்காக மாவட்டத்திற்குள்ளும் வெளியிலும் பயணிக்கும்போது இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ- பதிவு முறைக்காக வழங்கப்பட்டிருக்கும் பிரத்யேக இணையதளத்தில் வரும் மே 17 முதல் விண்ணப்பிக்கலாம்.







