தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து , இதுவரை ரூ 2.5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. திரையரங்குகள், வணிக வளாகங்களில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மற்றும் வாகனங்களில் குறைந்த அளவில் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிப்பாட்டுத் தளங்களில் இரவு 8 மணிக்கு மேல் அனுமதியில்லை.
சென்னையில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்ற, 1,118 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 659 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக இடைவேளையை கடைபிடிக்காத, முகக்கவசம் அணியாதவர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழக முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 2, 52, 34, 900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக அபராதம் வசூலிப்பு தொடர்பாகக் தமிழ காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் 43,58,200 ரூபாயும், மேற்கு மண்டலத்தில் ரூ. 43,40,500 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் 85,74,200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மண்டலத்தில் 44,11,200 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
Advertisement: