பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுவந்த விமானங்கள் இனி அலுவலக அறைகளை போல் உள்கட்டமைப்புகள் மாற்றப்பட்டு வானில் பறக்க காத்திருக்கின்றன.
விமானங்களின் உள்கட்டமைப்பில் சிறந்த விளங்கும் நிறுவனங்களுக்காக ‘Crystal Cabin Award’ ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தள்ளிப்போன விருது வழங்கும் விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்றது.
இதில் விமான உள்கட்டமைப்பை அலுவலக சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வித்தியசமான மாற்றங்களை வடிவமைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சின்சினாட்டி பல்கலைக்கழகம் மாணவர்கள் வடிவமைத்த ‘Coffee House Cabin’ வடிவிலான விமான உள்கட்டமைப்பு, ஏர்பஸ் நிறுவனம் வடிவமைத்த சுழல் நாற்காலி வடிவிலான விமான இருக்கை, Modulair S நிறுவனம் தயாரித்த ‘a,la carte’ Economy Seat மற்றும் இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த ‘Alice’ அலுவலக விமானகள் பரிசுகளை வென்றன.

சின்சினாட்டி பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ள ‘Coffee House Cabin’ வடிவிலான விமானத்தில் அலுவலகங்களில் அமைந்துள்ள Confrence Hall போன்ற மேசையின் இருபுறமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வகையில் இருக்கைகள் உள்ளது.

ஏர்பஸ் நிறுவனம் வடிவமைத்துள்ள “Airspace Cabin Vision 2030,”சுழல் நாற்காலி வடிவிலான விமான இருக்கையில் இருவர் எதிர் எதிரே அமர்ந்து பயணம் செய்யும் வகையில் தனி கேபின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி மற்றும் மதுபானங்கள் அருந்தவும் அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Modulair S நிறுவனம் தயாரித்துள்ள ‘a,la carte’ Economy Seat விமானத்தில் பயணிகள் விமானம் போன்ற இருக்கையில் அலுவலக பயணிகளைச் செய்ய லேப்டாப் டேபிள், மாத்திரைகள் வைப்பதற்கான இடம், அலமாரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இஸ்ரேல் நிறுவனம் தயாரித்துள்ள Alice விமானம் முழுவதும் மின்சார மோட்டார்கள் மூலம் இயங்கக்கூடியது. இந்த விமானம் 650 கிலோ மீட்டர் தூரம் மட்டும் பயணம் செய்யக்கூடிய இந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணிக்கமுடியும்.
இந்த வகையான அலுவலக விமானத்தில் ஒவ்வொரு இருக்கையின் முன்பு அலுவலக பொருட்களை வைப்பதற்காக மேசை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கையின் முன்பு ஜன்னல் உள்ளது. அதேபோல் சூழல் இருக்கையை தேவைக்கு ஏற்றார்போல் முன்னும் பின்னுமாக சாய்த்து கொள்ளலாம்.
இந்த வித்தியாசமான அலுவலக விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி அலுவலக வேலையை பறந்துகொண்ட ஆகாய மார்க்கத்திலும் செய்யமுடியும்.







