முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா அச்சம்: சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இருவர் தற்கொலை

கொரோனா அச்சத்தால் குடும்பத்துடன் சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கல்லுமேடு அருகே உள்ள எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, தன்னுடைய குழந்தைகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், மூத்தமகள் ஜோதிகாவுக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று வந்துவிடும் வாழ்வாதாரம் முடங்கிவிம் என்ற அச்சத்தில் லட்சுமி, ஜோதிகா, ரித்தீஷ், சிபிராஜ் ஆகிய நான்கு பேரும் சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில் ஜோதிகா மற்றும் ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இருவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

Advertisement:
SHARE

Related posts

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Ezhilarasan

பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 3ஆண்டுகள் சிறை!

Niruban Chakkaaravarthi

தமிழ்நாடு காவல்துறைக்கு டிடிவி தினகரன் கேள்வி

Saravana Kumar