முக்கியச் செய்திகள் கொரோனா

கொரோனாவின் கோரத்தாண்டவம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கடந்ததுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்து 90 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 632 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 327 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 151 கோடியே 58 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மேலும், நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்து 9 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 441 பேரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், இதுவரை ஆயிரத்து 409 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 2 ஆயிரத்து 214 பேர் ஒமிக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அசாம் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் ஆதாயமடைந்த பாஜக!

Arun

கனமழை; உதவி எண்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Halley Karthik

கொரோனாவால் உயிரிழந்தவர் உயிருடன் வந்தாரா? ஆந்திராவில் பரபரப்பு!