முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் இரு மடங்காக அதிகரித்த கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 2,731பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 1,003 அதிகமாகும். இது ஏறத்தாழ 2 மடங்கு அதிகமாகும்.

இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,55,587 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 674 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,06,370 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 12,412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,805 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்களை பொறுத்தவரை நேற்று சென்னையில் 876 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,489 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கோயம்புத்தூரில் 120 பேருக்கும் செங்கல்பட்டில் 290 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், 118 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 105 பேர் குணமடைந்துள்ளனர். 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

டி-20 உலகக் கோப்பை: ஒரே பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள்

Ezhilarasan

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை: முதலமைச்சர் உறுதி

Saravana Kumar

நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம்: விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Halley Karthik