நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று 10,860 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 37,379 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 1,71,830 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 24 மணிநேரத்தில், சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் 10,860 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பைவிட 34 சதவிகிதம் அதிகமாகும். இந்த பாதிப்பில் 89 சதவிகிதமானோர்களுக்கு தொற்று அறிகுறி ஏதும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CoronavirusUpdates
4th January, 6:00pmPositive Pts. (24 hrs) – 10860
Discharged Pts. (24 hrs) – 654Total Recovered Pts. – 7,52,012
Overall Recovery Rate – 92%
Total Active Pts. – 47476
Doubling Rate – 110 Days
Growth Rate (28 Dec – 3Jan)- 0.63%#NaToCorona— माझी Mumbai, आपली BMC (@mybmc) January 4, 2022
இதில் 834 பேருக்கு மருத்துவக் கண்காணிப்பும், 52 பேருக்கு மருத்துவ ஆக்சிஜனும் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 18,466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 66,308 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஒமிக்ரான் நிலவரத்தை பொறுத்த அளவில், இதுவரை 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 259 பேர் குணமடைந்துள்ளனர். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நகர மேயர் “மும்பை கொரோனா சுனாமியை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








