டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங், டெல்டா வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக கூறினார்.
அதிக நாடுகளில் பரவியுள்ளதால், டெல்டா வைரஸ் வகை, சர்வதேச அளவில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையாக மாறக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ், 75 லட்சம் மாடர்னா வகை கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.
Advertisement: