ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சோக நிகழ்வை கேட்ட அதே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டியும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம்…

திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சோக நிகழ்வை கேட்ட அதே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டியும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த வெள்ளிரவெளி பகுதியை சேர்ந்த 42 வயதான கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து கூலித் தொழிலாளியின் சகோதரர்கள் மூன்று பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர்களின் தாயார் பாப்பாள் அம்மாளுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் உறவினர்கள் மூலம் மகன்களும், மருமகளும் உயிரிழந்ததை அறிந்த பாப்பாள் அம்மாள், அதிர்ச்சியில் இரவு உறக்கத்திலேயே உயிரிழந்தார். இப்படி ஒரே குடும்பத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.