செய்திகள்

லட்சத்தீவு விவகாரம்; பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்!

லட்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டுமென காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரஃபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை அமல்படுத்தியுள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பதாகவும், அதேபோல மதுபான கடைகளுக்கு அனுமதியளிப்பதாகவும் அறிவித்தார். இது அத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அரசின் திட்டங்களுக்காக பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தவும், குண்டர் சட்டத்தையும் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக அத்தீவு மக்கள் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு இந்த விசயத்தில் தலையிட வேண்டும் என்று காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவில் அமல்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் குறித்து அப்பகுதி மக்களிடையே கருத்துகளை கேட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு மக்கள் கருத்தை கேட்டறியாமல் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதால் மக்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் என்றும் தனது கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கேரள அரசு, லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரஃபுல் கோடா படேலை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாலத்தீவு போல லட்சத்தீவினை மாற்றவே இத்தகைய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிரஃபுல் கோடா படேல் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Karthick

பிரபல தாதா சோட்டா ராஜன் உடல்நிலை விவகாரம்: மருத்துவமனை மறுப்பு

Karthick

ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற உச்சநீதிமன்றம்!

Gayathri Venkatesan