முக்கியச் செய்திகள் தமிழகம்

விபத்தில் சிக்கிய கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார்; டூரிஸ்ட் வாகனம் மோதியதால் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளையொட்டி கூட்டுறவுத்துறை
செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்த சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்திற்கு உள்ளானது.

இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் பட்டினப்பாக்கத்தில்
மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை
செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமது இனோவா காரில் பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் டூரிஸ்ட் வாகனம் தவறுதலாக நேருக்கு நேர் மோதியதில் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் காரின் முன் பகுதி முழுவதுமாக சேதாரமானது.

டூரிஸ்ட் வாகனம் சாலையின் வளைவில் தவறாக ஒட்டியதால் விபத்து ஏற்பட்டதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த காயங்களும் இன்றி தப்பிய கூட்டுறவு துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தாமாகவே சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ததுடன் தொடர்ந்து சுனாமி தினத்தை ஒட்டி பட்டினப்பாக்கத்தில் அஞ்சலி செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓமலூரில் முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

Gayathri Venkatesan

ஷமி – பும்ராவின் அதிரடி ஆட்டம்; இந்திய அணி அபார வெற்றி

G SaravanaKumar

மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Dinesh A