ஆட்டுடன் #THEGOAT படம் பார்க்க வந்த நடிகர் கூல் சுரேஷ்! இணையத்தில் வைரல்!

நடிகர் கூல் சுரேஷ் கோட் திரைப்படத்துக்கு ஆட்டைத் தூக்கிக் கொண்டு வந்த வீடியோ வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest…

The video of actor Kool Suresh Kot carrying a goat for the film is going viral.

நடிகர் கூல் சுரேஷ் கோட் திரைப்படத்துக்கு ஆட்டைத் தூக்கிக் கொண்டு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு, அதாவது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 1100 திரைகளில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் மற்றும் பிற அண்டை மாநிலங்களிலும் காலை 4 மணி முதல் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது. வெளிநாடுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 6000 திரைகளில் கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது.

இதையும் படியுங்கள் : அழகானவர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள் | மாணவ, மாணவிகளுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த #china அரசு!

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் ஆட்டைத் தூக்கிக் கொண்டு படம் பார்க்க வந்த விடியோ வைரலாகி வருகிறது. ‘கோட்’ திரைப்படம் என்பதால் ஆட்டை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார். சமூக வலைதளங்களில் சிலர் கூல் சுரேஷை விமர்சித்தும் வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.