#Germany | இஸ்ரேலிய தூதரகம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபர்… சுட்டுக்கொன்ற போலீசார்!

ஜெர்மனியில் நாஜி கால அருங்காட்சியகம் மற்றும் இஸ்ரேலிய தூதரகம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஜெர்மனியின் நாஜி கால அருங்காட்சியகம் மற்றும் கரோலினென்பிளாட்ஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகிலுள்ள…

#Germany | A person who wandered around suspiciously... was shot by the police!

ஜெர்மனியில் நாஜி கால அருங்காட்சியகம் மற்றும் இஸ்ரேலிய தூதரகம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

ஜெர்மனியின் நாஜி கால அருங்காட்சியகம் மற்றும் கரோலினென்பிளாட்ஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இன்று சந்தேகத்திற்கிடமான நபரின் நடமாட்டம் இருப்பதாக முனிச் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரின் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் போலீசார் கூறுகையில், இதில் வேறு யாரேனும் சம்பத்தப்பட்டுள்ளது தொடர்பாக எந்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் ஏன் சந்தேகத்திற்குரியவராக கருதப்பட்டார் என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. வேறு எந்த இடங்களுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.