அழகான ஆண்களையோ, பெண்களையோ சந்திக்கும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு சீனா அரசு எச்சரித்துள்ளது.
ஏனென்றால் அவர்கள் வெளிநாட்டு உளவாளிகளாக இருக்கலாம் என சீனா அரசு தெரிவித்துள்ளது. ரகசியத் தகவலைப் பெறக்கூடிய மாணவர்களை நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கு அவர்கள் வசீகரமாக நடந்துகொள்ளலாம் என்று தேசியப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : Kenya – காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை ரெபேக்கா உயிரிழப்பு!
வேலை விளம்பரங்கள், இணை தேடும் இணையத்தளங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு உளவாளிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. எந்த நாட்டின் உளவாளிகள் அத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர் என்பதை குறிப்பிடவில்லை. ஒருவரை ஒருவர் வேவு பார்க்க ஆள் அனுப்புவதாக மேற்கத்திய நாடுகளும் சீனாவும் அடிக்கடி ஒன்றை மற்றொன்று குற்றஞ்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.
சீன அரசில் பணியாற்றிய ஒரு தம்பதியை பிரிட்டனுக்கு வேவு பார்க்கும்படி அழைத்ததாகச் சீனா இவ்வாண்டு ஜூன் மாதம் குற்றஞ்சாட்டியது. இந்தநிலையில், மாணவ, மாணவிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.







