நடிகர் விஜய் கட்சிக் கொடியில் தொடரும் சர்ச்சை? தேர்தல் ஆணையத்தில் #BSP மனு!

தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது . நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவக்கி,…

தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது .

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவக்கி, அதற்கான கொடி மற்றும் பாடலை கடந்த ஆக.,22ம் தேதி அறிமுகப்படுத்தினார். கொடியில் சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறங்களில் இரட்டை போர் யானைகளும், நடுவே வாகை மலரும் இடம்பெற்றிருந்தது.

இதற்கு கட்சியின் முதல் மாநில மாநாட்டின் போது விரிவான விளக்கத்தை அளிப்பதாக விஜய் கூறினார். அதற்கு முன்னதாகவே பலரும் பலதரப்பட்ட விளக்கங்களை அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் விமர்சனங்களையும் கொட்டி தீர்க்கின்றனர்.

கட்சிக் கொடி குறித்து பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். முதலாவதாக பகுஜன் சமாஜ் கட்சி தவெக கொடியில் உள்ள யானையை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.