சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று லண்டன் செல்கிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக இன்று லண்டன் புறப்படுகிறார். இன்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் லண்டன் செல்லும் அண்ணாமலை, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல், தொடந்து 13 வாரங்கள், சர்வதேச அரசியல் கல்வி தொடர்பான படிப்பை பயில உள்ளார்.
13 வாரங்கள் கழித்து அக்டோபர் இறுதியில் மீண்டும் தமிழ்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், பாஜக மாநில தலைமை பொறுப்புகளை அண்ணாமலை லண்டனில் இருந்தபடியே கட்சியின் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் எனவும், வாரத்துக்கு ஒருமுறை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கட்சி செயல்பாட்டுகளை கவனித்து வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான்” – முதலமைச்சர் #MKStalin
பாஜகவில் தற்போது 1 கோடி உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்குடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், அது குறித்தான விவரங்களை தினசரி சேகரிக்கவும், மேலும் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் சம்பவங்கள் மற்றும் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் மாநிலத் துணைத் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அண்ணாமலைக்கு மாறாக தமிழ்நாடு பாஜகவிற்கு பொறுப்பு தலைவர் பதவி நியமிக்கப்படவில்லை எனவும் கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.







